UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 09:13 AM
திருப்பூர்:
மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலெக்டர் கிறிஸ்துராஜ் காலை உணவு உட்கொண்டார்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 77 பள்ளிகளில் இந்த திட்டம் துவக்கப் பட்டது. இரண்டாம் கட்டமாக, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மொத்தம் 1,081 அரசு பள்ளிகளில் படிக்கும், 75,482 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப் படுவது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.அவ்வகையில், நேற்று பெருமாநல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வள்ளிபுரம் ஊராட்சி காரிங்காரன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சீரான அளவில் காலை உணவு வழங்கப்படுகிறதா எத்தனை மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர் என ஆய்வு செய்தார். மாணவர்களுடன் தரையில் அமர்ந்த கலெக்டர் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அவர் காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
