சந்திரயான் - 3 விஞ்ஞானிகளை பாராட்டி சென்னிமலையில் பெட் ஷீட் தயாரிப்பு
சந்திரயான் - 3 விஞ்ஞானிகளை பாராட்டி சென்னிமலையில் பெட் ஷீட் தயாரிப்பு
UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:00 PM
சென்னிமலை:
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, சென்னிமலை ஜக்காடு துணி வடிவமைப்பாளர் அப்புசாமி, சந்திரயான் - 3 ராக்கெட் மற்றும் நிலவு படங்களுடன் பெட்ஷீட் தயாரித்து அசத்தி உள்ளார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஜக்காடு துணி மற்றும் பெட் ஷீட் வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் அப்புசாமி, 48. இவர், தன் ஓய்வு நேரங்களில், தலைவர்களின் உருவங்களை கைத்தறி பெட்ஷீட்களில் வடிவமைத்து சாதனை புரிந்து வருகிறார். தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான் - 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதை கொண்டாடும் விதமாகவும், விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், சந்திரயான்-3 ராக்கெட் மற்றும் நிலவு படங்களை பெட் ஷீட்டில் உருவாக்கியுள்ளார்.பெட் ஷீட்களை உருவாக்க, 2க்கு 17 பருத்தி முறுக்கு நுாலை கொண்டு, 400 ஊக்ஸ் கொண்ட ஜக்கார்டு தறியில் நெசவு செய்துள்ளார். இதை சந்திரயான் கவுன்டவுன் தொடங்கிய காலத்தில் இருந்து யோசித்து, அதை வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட பின், வடிவமைத்து தறியில் நெசவு செய்ய ஆரம்பித்துள்ளார். இதை வடிவமைக்க ஒரு வாரமானது. பெட்ஷீட்டின் அளவு, 60க்கு 90 ஆகும். இந்த பெட்ஷீட்டை இஸ்ரோ நிறுவனத்திற்கும், தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலுவுக்கும் பரிசளிக்க உள்ளதாக அப்புசாமி கூறினார்.
