தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:02 PM
நாமக்கல்:
ஒப்பந்த அடிப்படையில், தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணியிடத்துக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், புதுச்சத்திரம், மோகனுார், திருச்செங்கோடு மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், மதி சிறகுகள் தொழில் மையம் இயங்கி வருகிறது. இந்த தொழில் மையத்தில் பணிபுரிய காலியாக உள்ள ஒரு பணியிடமான, தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. அதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், கணினி தேர்ச்சியுடன் ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டார அளவில் செயல்பாடுகளை நிர்வகிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். தொழில் முனைவோருக்கான திறன் தொகுப்பு பெற்றவராக இருத்தல் வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.தகுதியுள்ள நபர்கள் வரும் 9 மாலை 5:00 மணி வரை மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், அறை எண்.212, முதல் தளம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம்-637003 தொலைபேசி எண்:
04286 290730 என்ற முகவரியில், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
