UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:03 PM
அ நிறம் | அளவு
ஊட்டி:
மாநில அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, கூடலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பந்தலூர் அருகே குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பால்துரை மற்றும் பந்தலூர் அருகே அம்பல வயல் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோருக்கு கல்வித்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதில் ஆசிரியர் பால்துரையின் மனைவியும், தென்காசி வேலாயுதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான சகுந்தலாதேவியும் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், ஆசிரியர் பாஸ்கரன் கடந்த 2010 முதல் ஒரே பள்ளியில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
