UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:06 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
ஜி-20 மாநாட்டை யொட்டி டில்லி நகரங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்தார்.ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து டில்லி பிரகதி மைதானத்தில் வரும் செப்.,9ம் தேதி மாநாடு நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று டில்லி கவர்னர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்தார். அவருடன் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். பின்னர் டில்லி போலீசார் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணி ஜப்ராபாத், தயாள்பூர், நாண்ட் நகரி, வடக்கு டில்லி ஆகிய நகரங்களில் நடந்தது.
