UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:05 PM
சந்திரயான்- 3 வெற்றி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை கல்லுாரி மாணவ, மாணவியரிடம் கொண்டு செல்லும் வகையில், மத்திய அரசின் கண்காட்சியில், முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசின் வளர்ச்சிப்பணிகளை பொதுமக்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாடு முழுக்க கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்ற அறிவியல் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும், பள்ளி, கல்லுாரிகளில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இஸ்ரோவின் சமீபத்திய சாதனையான சந்திரயான்-3 குறித்த விளக்கங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சி ஏற்பட்டாளர்கள், மாணவ, மாணவியருக்கு உரிய விளக்கம் வழங்குகின்றனர். அதோடு, காட்சி வடிவிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, குறும்படமாகவும் திரையிடப்படுகிறது. இதன் வாயிலாக கல்லுாரி மாணவ, மாணவியருக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் என மத்திய மக்கள் தொடர்பக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
