தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க தயங்காதீர்!

சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க தயங்காதீர்!

சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க தயங்காதீர்!


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரியில், மாநில சைபர் கிரைம், சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து, சைபர் குற்றங்களை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த குழு விவாதம் மற்றும் கருத்தரங்கு, நேற்று முன்தினம் நடந்தது.கருத்தரங்கில் ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பாலு சுவாமிநாதன் பேசியதாவது:
எங்கள் அமைப்பின் வாயிலாக, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, 2004ல் இருந்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது, எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனால், இணையத்தை பயன்படுத்தாத நபரே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதை சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பயத்தை ஏற்படுத்தி, ஆன்லைன் வாயிலாக பணத்தை அபகரிக்கின்றனர். நீங்கள் செலுத்திய மின் கட்டணம் எங்களுக்கு வரவில்லை; உடனடியாக கட்டணத்தை செலுத்துங்கள்.தவறினால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மிரட்டு வகையில் குறுஞ்செய்தி அனுப்பியும் பேசியும் பணம் சுருட்டுகின்றனர். மர்ம நபர்களிடம் ஏமாற வேண்டும் என யாரும் பணத்தை இழப்பது இல்லை. சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பணத்தை இழக்க நேரிட்டால் உடனே 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும். எந்த தயக்கமும் இன்றி www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரிகள் வங்கிகளை தொடர்பு கொண்டு, உங்கள் பணம் பறிபோய்விடாமல் முடக்கி விடுவர். காலம் தாழ்த்தினால் பணத்தை மீட்பது மிகவும் சிரமம்.பணம் இழந்தது பற்றி வெளியில் தெரிந்தால், அவமானம் ஆகிவிடுமோ என, ஒரு போதும் நினைக்க வேண்டாம். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பது ஒவ்வொரு நபரின் சமூக பொறுப்பு. பெண்களுக்கு ஏதேனும் பதிப்பு ஏற்பட்டால், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கேலிக்கு ஆளாவோம் என, கருத வேண்டாம். காவல் நிலையம் சென்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்பது அல்ல. சைபர்கிரைம் இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம். அப்போது தான், சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும் முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.நம்பர் - 1 மோசடி எது?
இது குறித்து, மாநில சைபர் கிரைம் பிரிவு டி.எஸ்.பி., ஆர்.தாமஸ் ஜேசுதாசன் கூறியதாவது:
சைபர் குற்றங்களில், பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடி தான் நம்பர் - 1 இடத்தில் உள்ளது. இது தொடர்பாக ஓராண்டில் 7,851 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல இணையதளம் வாயிலாக வரன் தேடுவது தொடர்பாக 156 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிப்பது தொடர்பாக, 1,900; வெளிநாட்டு வேலை தொடர்பாக 2,624; லோன் ஆப் மோசடி குறித்து 5,097 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நாங்கள் நடத்திய ஆய்வில், முதியோர் மற்றும் படித்தவர்கள் தான் அதிகம் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்ளும் விபரம் தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அதற்கான மென்பொருள்களை உருவாக்குவது தொடர்பாக மாவட்டம் தோறும் சைபர் ஹேக்கத்தான் எனும் போட்டிகளை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us