தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் புதிய எம்.பி.ஏ., படிப்பு

ஐ.ஐ.டி.,யில் புதிய எம்.பி.ஏ., படிப்பு

ஐ.ஐ.டி.,யில் புதிய எம்.பி.ஏ., படிப்பு


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலாண்மை துறைகளில் பணியாற்றும் தொழில் வல்லுனர்களுக்கு உதவும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், எக்சிகியூட்டிவ்  எம்.பி.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. சர்வதேச தரத்தை பின்பற்றும் வகையில், தலைமைத்துவம், கலாசார நுண்ணறிவு, டிஜிட்டல் மேலாண்மை உள்ளிட்டவற்றை ஆழமாக போதிக்கும் வகையில், இந்த படிப்புக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மேலாண்மை கல்வி துறை தலைவர் பேராசிரியை தேன்மொழி கூறுகையில், இந்த படிப்பில் இடம்பெற்றுள்ள நவீன பாடத்திட்டம், செயல் திட்டம், டிஜிட்டல் முறை ஆகிய அம்சங்கள், தொழில் வல்லுனர்களுக்கு புதிய மாற்றத்தையும், நிறுவனங்களில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்றார். இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை, doms.iitm.ac.in/emba என்ற இணையதளத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us