தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்பத்தால் வாழ்க்கை தரம் உயரும்: முதல்வர் சித்தராமையா

தொழில்நுட்பத்தால் வாழ்க்கை தரம் உயரும்: முதல்வர் சித்தராமையா

தொழில்நுட்பத்தால் வாழ்க்கை தரம் உயரும்: முதல்வர் சித்தராமையா


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
தொழில்நுட்பம் என்பது மனித வளர்ச்சிக்கான ஒரு கருவி. ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும், தொழில்நுட்பத்தால் முடியும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நவம்பரில் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நகரின் தனியார் நட்சத்திர ஹோட்டலில், வெவ்வேறு தொழில்நுட்ப முக்கியஸ்தர்களுடன் நேற்று முதல்வர் சித்தராமையா கலந்துரையாடினார்.அப்போது முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
தொழில்நுட்பம் என்பது மனித வளர்ச்சிக்கான ஒரு கருவி. ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும் முடியும்.தொழில்நுட்ப உச்சி மாநாடு
இதன் வளர்ச்சியை அனைவரும் அணுகும் வகையில் உருவாக்குவது, நமது பொறுப்பு. நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை, கர்நாடகா வழிநடத்தும். தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் மூலம், கர்நாடகாவின் சாதனை மட்டுமல்ல, மாநிலத்தின் அசைக்க முடியாத உணர்வையும் பேசுகிறது.முன்னாள் பிரதமர் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, தொலைநோக்கு பார்வையின்படி, தகவல் தொழில்நுட்பம், பயோ தொழில்நுட்பத்துக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது.உலகிலேயே முதலிடம்
கர்நாடகாவின் முதல் தகவல் தொழில்நுட்பக் கொள்கை 1992ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டது. பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் தலைநகரம். தொழில்நுட்ப ஏற்றுமதியில் நாட்டிலேயே பெங்களூரு முன்னணியில் இருக்கிறது. உலகிலேயே முதலிடம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளைச் சமாளிக்க தொழில்நுட்பம் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.உள்கட்டமைப்பு மேம்பாடு
புதிய நிறுவனங்கள் துவங்குவதற்குத் தேவையான மானியம் உட்பட உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. புதுமையான மற்றும் நிலையான தகவல் தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதே நோக்கம். போக்குவரத்து நெரிசலை குறைக்க பொது போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதற்காக, மெட்ரோ ரயில் இணைப்பு வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்கான மெட்ரோ பணிகள் விரைவில் முடிக்கப்படும்.தைவானின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பாக்ஸ்கான், தனது உற்பத்திஆலையை தேவனஹள்ளி பகுதியில் விரைவில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனேக்கல்,தொட்டபல்லாப்பூர் உட்பட பிற நகரங்களில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே மங்களூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார், ஐ.டி.,  பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us