தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பஸ்சை பிடிக்க மாணவர்கள் 3 கி.மீ., துாரம் நடை

பஸ்சை பிடிக்க மாணவர்கள் 3 கி.மீ., துாரம் நடை

பஸ்சை பிடிக்க மாணவர்கள் 3 கி.மீ., துாரம் நடை


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு காவிலிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க ரோட்டில் குழி தோண்டப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அப்பகுதியில் இயங்கி வந்த இரண்டு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த நிலையில், நிறுத்தப்பட்ட பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்கள், பனியன் தொழிலாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியினர் கூறியதாவது: 
காவிலிபாளையத்தில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் குமார் நகர், ஜெய்வாபாய், பிஷப் உள்ளிட்ட பள்ளிகளில் படித்து வருகின்றனர். பலரும், பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களும், தொழிலாளர்களும் செல்ல வசதியாக, 39 மற்றும் 4சி, ஆகிய இரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த, நான்கு ஆண்டுக்கு முன் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியின் போது இரண்டு பஸ்களும் நிறுத்தப்பட்டது.பணி நிறைவு பெற்றும் கூட, பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்களை இயக்க, அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மாணவர்கள், தொழிலாளர்கள், காவிலிபாளையத்தில் இருந்து 3 கி.மீ., துாரம் நடந்து சென்று சிறு பூலுவபட்டி சென்று அங்கிருந்து, பள்ளிக்கு செல்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us