தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை வகுப்புகள்: 14ம் தேதி துவக்கம்

வேளாண் பல்கலை வகுப்புகள்: 14ம் தேதி துவக்கம்

வேளாண் பல்கலை வகுப்புகள்: 14ம் தேதி துவக்கம்


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்தாண்டு, அகில இந்திய இடஒக்கீடு, 20 சதவீதம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு சார்ந்த பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புகள் தாமதமாக துவக்கப்பட்டது. இத்தாமதத்தால், வேளாண் பல்கலையின் கீழ், தனியார் கல்லுாரிகளில், 5 முதல் 10 சதவீத இடங்கள் காலியாக இருந்தன. இதை சரிசெய்யும் வகையில் நடப்பாண்டில், ஜூலை மாதமே வகுப்புகள் துவங்க திட்டமிட்டுள்ளதாக, பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டது.அதன் பின், பொறியியல், மருத்துவம், கால்நடை படிப்புக்கான கலந்தாய்வு காரணமாக, வேளாண் பல்கலையில் சேர்ந்த சில மாணவர்கள், வேறு கல்லுாரிகளுக்கு சென்றனர். அதனால், ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும், 8ம் தேதி வரை நடப்பதால், மேலும் சில மாணவர்கள் மாறிச்செல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து, மாணவர்கள் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், வேளாண் கல்லுாரிகளில் எழும் காலியிடங்கள் ஒன்றாக இருந்தாலும், நகர்வு முறை அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறோம் வரும், 14ம் தேதி இளநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கவுள்ளன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us