இளைஞர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்: மத்திய அமைச்சர்
இளைஞர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்: மத்திய அமைச்சர்
UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 01:56 PM
சென்னை:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மெட்டா ஆகியவற்றுக்கு இடையேயான மூன்றாண்டு ஒப்பந்தத்தை புதுடெல்லியின் நேற்று தொடங்கி வைத்தார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தர்மேந்திர பிரதான் பேசுகையில், தொழில்முனைவோருக்கான கல்வி டிஜிட்டல் திறனை அனைத்து தரப்பினரையும் சென்றடையச் செய்யும் என்று கூறினார். மேலும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர்களை எதிர்கால தொழில்நுட்பங்களுடன் தடையின்றி இணைக்கும். புதிய தலைமுறையின் சிக்கல்களை களைந்து தொழில்முனைவோராக மாற்றும், என்றார்.ராஜீவ் சந்திரசேகர் பேசுகையில் விரைவாக மாறிவரும் இந்த காலங்களில் இளைஞர்களையும், தொழிலாளர்களையும் தயார்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் சூழலில் வெற்றி பெறுவதற்கும் முக்கிய பங்கு வகிப்பதற்கும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும், என்றார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மெட்டா மற்றும் என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி, ஏ.ஐ.சி.டி.இ மற்றும் சி.பி.எஸ்.இ ஆகியவற்றுக்கு இடையே 3 ஒப்பந்தங்கள் பரிமாறக் கொள்ளப்பட்டன. கல்வி இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
