UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 09:22 AM
அ நிறம் | அளவு
சூலுார்:
டில்லியில் நடக்கும் ஜி -20 மாநாட்டை ஒட்டி என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.சூலுார் ஆர்.வி.எஸ்.கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் ஜி -20 மாநாடு குறித்த விழிப்புணர்வு நடந்தது. டில்லியில் வரும் 9ம் தேதி ஜி- 20 மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், என்.சி.சி., மாணவர்கள், மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், அதில் நமது நாட்டின் பங்கு குறித்தும், மாநாட்டில் நடக்கும் விவாத பொருட்கள் குறித்தும் விளக்கினர். மாநாடு குறித்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. என்.சி.சி., அலுவலர் கேப்டன் தீபக் ரிஷாந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
