தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருது பட்டியலில் சிறப்பு ஆசிரியர்கள் புறக்கணிப்பா?

நல்லாசிரியர் விருது பட்டியலில் சிறப்பு ஆசிரியர்கள் புறக்கணிப்பா?

நல்லாசிரியர் விருது பட்டியலில் சிறப்பு ஆசிரியர்கள் புறக்கணிப்பா?


UPDATED : செப் 07, 2023 12:00 AM

ADDED : செப் 07, 2023 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2023 12:00 AM ADDED : செப் 07, 2023 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழக அரசு சார்பில், 2022-23 கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய, 390 பேருக்கு, மாநில நல்லாசிரியர் விருது  வழங்கப்படுகிறது. இதில், சிறப்பாசிரியர்களின் பெயர்கள், சொற்பமாகவே இருப்பதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்குட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில், 73 பேர் நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, ஒரு ஓவிய ஆசிரியர் பெயர் மட்டுமே இருப்பதாக, சிறப்பாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில் மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில், தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்களே, அதிகம் இடம்பெறுகின்றன. ஆனால், சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்குட்பட்ட ஏழு மாவட்டங்களில், ஒரு சிறப்பாசிரியர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மற்ற மாவட்டங்களில், விருது பெற தகுதியான சிறப்பாசிரியர்களே இல்லையா? கலை பண்பாட்டு திருவிழா, கலா உத்சவ், கலை அரங்கம் போன்ற செயல்பாடுகளில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்காமல் புறக்கணித்தது சரியல்ல என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us