UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 09:42 AM
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் விண்கலம், கடந்த ஆக. 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரிலிருந்து வெளியேறிய ரோவர், நிலவில் சுற்றிவந்து, ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது.சந்திரயான் - 3 வெற்றி பயணத்தை கொண்டாடும் வகையிலும், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு மீதான ஆர்வத்தை துாண்டும் வகையிலும், இந்திய அரசு சார்பில், சந்திரயான் - 3 மெகா வினாடி -வினா போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது. mygov.in/chandrayaan3 என்கிற இணையதள பக்கத்தில், பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், இ-மெயில் விவரங்களை பதிவு செய்து நுழைய வேண்டும்.அதில், சந்திரயான் - 3 தொடர்பான, சரியான விடையை தேர்வு செய்வது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் அரை நிமிடம் வீதம், மொத்தம் பத்து கேள்விகளுக்கு 5 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். வினாடி - வினாவில் பங்கேற்றவர்களுக்கு, அடுத்த 24 மணி நேரத்தில், மெசேஜ், இ-மெயில் வாயிலாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். சிறப்பாக விடையளிப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிலளித்து வருகின்றனர்.
