தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் ஆய்வு தலைமை செயலர் உத்தரவு

பள்ளிகளில் ஆய்வு தலைமை செயலர் உத்தரவு

பள்ளிகளில் ஆய்வு தலைமை செயலர் உத்தரவு


UPDATED : செப் 07, 2023 12:00 AM

ADDED : செப் 07, 2023 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2023 12:00 AM ADDED : செப் 07, 2023 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசால் உருவாக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுப்புறத் துாய்மை, கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.ஆய்வுகளுக்காக பள்ளிப் பார்வை, போன் செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வு செய்வதையும், வகுப்பறைகளை கண்காணிப்பதையும், போன் செயலி வழியே உறுதி செய்யலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us