தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3 பல்கலை.,களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நியமனம்

3 பல்கலை.,களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நியமனம்

3 பல்கலை.,களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நியமனம்


UPDATED : செப் 07, 2023 12:00 AM

ADDED : செப் 07, 2023 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2023 12:00 AM ADDED : செப் 07, 2023 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை., கல்வியியல் பல்கலை ஆகிய மூன்று பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. மேற்கண்ட பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பு கவர்னரின் பார்வைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என கவர்னர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் யுஜிசி யின் விதிகளை மட்டும் பி்ன்பற்றினால் போதும். உறுப்பினர்களை சேர்க்க வேண்டியது இல்லை என குறிப்பிட்டு இருந்தது.இந்நிலையில் தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் முதன்முறையாக யுஜிசி பிரதிநிதியுடன் தேடுதல் குழுவை அமைத்து கவர்னர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன்படி இக்குழுவில் ஒவ்வொரு பல்கலைகழகத்திற்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து கவர்னர் ரவி உத்தரவு பிறப்பித்து உள்ளார். கவர்னர் அமைத்த தேடுதல் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இல்லை. பாரதியார் பல்கலை.யில் மட்டும் தமிழக அரசின் பிரதிநிதி உள்ளனர். சென்னை பல்கலை., கல்வியியல் பல்கலை.களில் தமிழக அரசின் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை.கவர்னர் அமைத்த குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி, வேந்தர் என்ற முறையில் தன் சார்பில் பிரதிநிதி, செனட் குழுவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கவர்னர் உத்தரவில் சென்னை பல்கலை.யில் தமிழக அரசின் இடம் பெறாதது அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us