மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மதிப்பீட்டு தேர்வு வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 02:01 PM
ஈரோடு:
மதிப்பீட்டு தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணி தேர்வுகளில் (யு.பி.எஸ்.சி.,) தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம் தேர்வாகும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நான் முதல்வன் திட்டத்தில் மதிப்பீட்டு தேர்வு நடத்தி, 1,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு மாதம், 7,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.இதன்படி இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு தேர்வு மாநிலம் முழுவதும் வரும், 10ல் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். ஈரோட்டில் எம்.எஸ்.சாலை கலைமகள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையங்களில நடக்கிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு வந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்து, ப.செ.பார்க் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வினாத்தாள் காப்பு மையத்தில் வைத்துள்ளனர்.இந்த அறை முன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
