தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பயிற்சி முதல்வரிடம் மனு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பயிற்சி முதல்வரிடம் மனு
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 02:04 PM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணனிடம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், அதன் மாநில பொருளாளர் முருக செல்வராசன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் பிரபு, செயலாளர் சங்கர் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டதுமனுவில் கூறியிருப்பதாவது:
எண்ணும், எழுத்தும் திட்டம் உள்ளிட்ட கல்வி திட்டங்களுக்கான பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை மற்றும் கல்வித் துறையின் விடுமுறை நாட்களில் நடத்துவதை கைவிட வேண்டும். மாநில, மாவட்ட ஒன்றிய கருத்தாளராக ஆசிரியர் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். கல்வித்துறையில் வலைதளம், மென்பொருள், செயலி மற்றும் இயங்கலை பதிவு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.எண்ணும், எழுத்தும் கல்வி திட்டத்தில் கல்வித் துறையின் ஆய்வு அலுவலர் மற்றும் பார்வை அலுவலர் அல்லாத மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வது மற்றும் ஆய்வு செய்வதென்பது முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
