சந்திரயான் - 3 லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
சந்திரயான் - 3 லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 04:30 PM
பெங்களூரு:
நிலவில் இருக்கும் சந்திரயான்-3 லேண்டரை, சந்திரயான்-2 ஆர்ப்பிட்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது என்பதால், லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் உள்ளன.இது குறித்து, இஸ்ரோ எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சந்திரயான்-2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது என்பதால், லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் உள்ளன.இந்த புகைப்படம் கடந்த 6ம் தேதி சந்திரயான்-2 ஆர்ப்பிட்டரின் டிஎபெஸ்ஏஆர் ரேடார் கருவி மூலம் எடுக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நிலவின் மேற்பரப்பை சந்திரயான்-2 ஆர்ப்பிட்டர் படம் பிடித்து அனுப்பி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலை கொண்டுள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
