ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 05:35 PM
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு செப்., 2ம் வாரத்தில் துவங்குகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், செப்., 2ம் வாரத்தில் துவக்கப்பட உள்ளது. கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்வழி கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். கல்விக் கட்டணம், 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய் செலுத்த வேண்டும். இப்படிப்பின் மூலம், உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதை கடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளராகலாம்.மேலும் தொடர்புக்கு, உதவி பேராசிரியர்கள் கோவிந்தன், 99422 79190, சசிகுமார், 97867 92696, 87784 96406, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சந்திரசேகரன், 94864 18694, தொலைபேசி, 0422 - 6611229 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
