தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 05:36 PM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பழங்குடியினர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தற்காலிக பணிக்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர் காலிப்பணியிடம், இடைநிலை ஆசிரியர், -2, பட்டதாரி ஆசிரியர், 2 (தமிழ், அறிவியல் தலா, 1) முதுகலை பட்டதாரி ஆசிரியர், -1 (உயிரியல்) ஆகிய பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன், மாவட்ட திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம்-637411, என்ற முகவரிக்கு அனுப்பலாம்.விண்ணப்பங்கள், வரும், 8, மாலை, 5:30 மணிக்குள் (நாளை) சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி பெற்ற பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பழங்குடியினர் இல்லாத பட்சத்தில், ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணி நாடுனர்கள் இருந்தால், ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லை என்றால், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.நிரந்தர பணியாளர்களை கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல், பள்ளி மேலாண் குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். தொகுப்பூதிய பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேலும் விபரங்களுக்கு, 94438 36370 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
