தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பாடல் வீடியோ அரபு மொழியில் வெளியீடு

பாரதியார் பாடல் வீடியோ அரபு மொழியில் வெளியீடு

பாரதியார் பாடல் வீடியோ அரபு மொழியில் வெளியீடு


UPDATED : செப் 10, 2023 12:00 AM

ADDED : செப் 10, 2023 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2023 12:00 AM ADDED : செப் 10, 2023 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட, பாரதியார் பாடல் குறுந்தகடை, அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.சென்னை பல்கலை, அரபு, பாரசீக, உருதுத் துறை, தமிழ் மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து, பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு பாடல், அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. உருது துறை பேராசிரியர் ஜாகிர் உசைன், இதற்கான பணியை மேற்கொண்டார். இந்த குறுந்தகடின் வெளியீட்டு விழா, சென்னை பல்கலையில் நேற்று நடந்தது. குறுந்தகடை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கக்கூடிய அரபு மொழியில், பாரதியார் பாடல் வெளியிடப்பட்டது, தமிழுக்கு பெருமை சேர்க்கிறது. தமிழகத்தில் உள்ள சிலைகள் குறித்த தகவல்களை, செய்தித் துறையின் இணையதளம் வழியே தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, வாசுகி, முகமது ஜியாவுதின், கவிஞர் நிரஞ்சன் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us