UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 05:03 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:
தேசிய அளவில் நடந்த வீல்சேர் ஓட்ட போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற கூடலுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மனோஜ்குமாருக்கு பாராட்டு விழா நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான வீல்சேர் ஓட்டப் போட்டி சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. கூடலுார் அருகே தம்மணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் 30, போட்டியில் பங்கேற்றார். இவர் 100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் வீல் சேர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை பெற்றார். இவருக்கு வின்னர் ஸ்போர்ட்ஸ், தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. அமைப்பு சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
