கல்லூரிகளில் பல்கலை டி.டி.இ., சேர்க்கை: புதிய நடைமுறை
கல்லூரிகளில் பல்கலை டி.டி.இ., சேர்க்கை: புதிய நடைமுறை
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 10:23 AM
இப்பல்கலையில் அதிக வருவாய் வரும் பிரிவாக டி.டி.இ., உள்ளது. ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்த இப்பிரிவு 10 ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. நிரந்தர பணியாளர்கள் இல்லாதது, தேர்வு முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடாதது, பட்டச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பெறுவதில் மாணவர்களை அலைக்கழிப்பது, புதிய பாடப் பிரிவுகள் இல்லாதது என பல காரணங்களால் காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பிற பல்கலைகளில் மாணவர்கள் சேர்ந்தனர்.இதுதவிர முன்பு தொலைநிலைக் கல்வி சேர்க்கை மையங்கள் நடத்த அனுமதி பெற்ற தனியார் பலர் மாணவர் சேர்க்கை கட்டணங்களை பல்கலைக்கு சரியாக செலுத்துவதில்லை என புகாரும் எழுந்தது. இதனால் ரூ. பல லட்சங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவற்றை வசூலிக்கவும் இதுவரை பல்கலை நடவடிக்கை இல்லை.கல்லுாரிகளுக்கு வாய்ப்பு
இந்நிலையில் பல்கலையில் கடும் நிதித்தட்டுப்பாடு நிலவுகிறது. பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் தருவது ஒவ்வொரு மாதமும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வுகாண தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக டி.டி.இ., மாணவர் சேர்க்கை மையங்களை நடத்த பல்கலை இணைவிப்பு பெற்ற கல்லுாரிகளுக்கு அனுமதி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது வரை 13 கல்லுாரிகள் மையங்கள் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. தொலைநிலையில் தேர்வு முடிவுகள் அறிவிப்பு, சான்றிதழ் பெறுவதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு துணைவேந்தர் குமார் தலைமையில் விரைவில் தீர்வு காணப்படும். கல்லுாரிகளுக்கு மையங்கள் அனுமதிப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
