தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் சார்பில், பிளஸ் 2 படிக்கும் ஏழை மாணவ - மாணவியருக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், காலை 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையில், ஆர்.ஏ.,புரத்தில், ஆங்கில வழியில் வணிகவியல் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.பொருளாதாரம், தொழிற் கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வகுப்பு நடத்தப்படும். இத்துடன், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயன்பெற, 9841030040 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இது குறித்து மருத்துவர் சந்திரசேகர் கூறியதாவது:
ஆங்கில வழியில், வணிகவியல் பிரிவு பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக, சிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் கற்றுத் தருகிறோம். ஏற்கனவே ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் ஸ்டேட் போர்டு பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கும் இதுபோன்று இலவச பயிற்சி வகுப்பு நடத்தினோம். இந்த வகுப்பு மூலம், மாணவ, மாணவியர் இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டு. விருப்பமுடையோர் பங்கு பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us