எண்ணும் எழுத்து திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்து திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 04:06 PM
மதுரை:
கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக் வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பாரதிசிங்கம், ஜோயல்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன், உயர்மட்ட குழு உறுப்பினர் சீனிவாசன், பாலகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து பேசினர்.கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். எமிஸ் பதிவேற்றப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர். அமைப்பு நிர்வாகி எனிமால் ஞானசெல்வி நன்றி கூறினார்.
