தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குளித்தலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குளித்தலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குளித்தலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


UPDATED : செப் 13, 2023 12:00 AM

ADDED : செப் 13, 2023 07:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2023 12:00 AM ADDED : செப் 13, 2023 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:
குளித்தலை அரசு கலை கல்லுாரியில் முதுகலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது.இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான அறிவிப்பை முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதில், அரசு கலை கல்லூரியில் முதுகலை மற்றும் அறிவியல் பாடங்களான முதுகலை தமிழ், ஆங்கிலம், வணிக வியல், முதுநிலை அறிவியல் பாடங்களான மின்னணுவியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் நடந்தது.மேலும் காலியாக உள்ள முதுகலை தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், மின்னணுவியல், இயற்பியல், கணினி அறிவியல் இடங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பிக்காதவர்கள் கல்லுாரி அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடையலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us