தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு

நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு

நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு


UPDATED : செப் 13, 2023 12:00 AM

ADDED : செப் 13, 2023 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2023 12:00 AM ADDED : செப் 13, 2023 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதல் சுயநிதி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையான, நந்தா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை, அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் முதல் சுயநிதி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக நந்தா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. மருத்துவமனை துவக்க விழா, முதலாமாண்டு மருத்துவ வகுப்புகள் தொடக்க விழாவும் நேற்று நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியும், நந்தா கல்வி நிறுவனத்தின், 21வது கல்லுாரியான நந்தா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.தொடர்ந்து மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் மற்றும் நுாலகம், மாணவர்களின்-தங்கும் விடுதி, ஆய்வு கூடங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன்,மாணவ-மாணவியர், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நந்தா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் சந்திரபோஸ் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் சுந்தரவேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us