எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சி துாய்மைக்கான உறுதி மொழி ஏற்பு
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சி துாய்மைக்கான உறுதி மொழி ஏற்பு
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 04:49 PM
அ நிறம் | அளவு
ஊட்டி:
ஊட்டி அருகே ஓடைக்காடு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி (பொ) தலைமை வகித்து பேசுகையில், நம் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது போல் பள்ளிகளை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும், நீலகிரி மாவட்டம் நெகிழி, இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. சுற்று சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் மரக்கன்று நடவு செய்ய வேண்டும், என்றார்.முன்னதாக, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என அனைவரும் துாய்மைக்கான உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, பள்ளி தலைமையாசிரியர் சோபனா உட்பட பலர் பங்கேற்றனர்.
