காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; பொது வினாத்தாள் நடைமுறையில் தேர்வு
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; பொது வினாத்தாள் நடைமுறையில் தேர்வு
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 04:48 PM
திருப்பூர்:
பொது வினாத்தாள் நடைமுறையை பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு நடக்கவுள்ளது. ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவருக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதாலும், அந்த வினாத்தாள்கள் புத்தகத்துக்கு பின்புறம் உள்ள வினாக்களை மட்டுமே கொண்டிருப்பதால், மாணவர்கள் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்தது.இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுவினாத்தாள் நடைமுறையை பின்பற்றி, காலாண்டுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடுநிலை மற்றும் உயர்கல்விக்கு, வரும், 19 முதல், 27ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 6, 7 மற்றும் 8ம் வகுப்புக்கு காலையிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடக்கவுள்ளது.மேல்நிலைக்கல்வியை பொறுத்தவரை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு, வரும் 15 முதல், 27ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு காலையிலும், பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.வினாத்தாள்எப்படி?
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வுக்கு முந்தைய நாள், அந்தந்த தேர்வுக்கான வினாத்தாளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எமிஸ் கணக்கு எண் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து, &'பிரின்ட்&' எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வினாத்தாளை மாணவருக்கு தேர்வு நாளில் வழங்க வேண்டும்.அந்தந்த பள்ளிக்கென வழங்கியுள்ள எமிஸ் கணக்கில் மட்டும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும், வேறொரு பள்ளியின் &'எமிஸ்&' கணக்கை பயன்படுத்தி, வினாத்தாளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தால், முன்கூட்டியே முதன்மை கல்வி அலுவலரிடம், தகவல் தெரிவித்து ஆலோசனை பெற்றுக் வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
