தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி அவகாசம்

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி அவகாசம்

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி அவகாசம்


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனித்தேர்வு எழுதியோரின் மதிப்பெண் சான்றிதழ் பெற, கோவை மாவட்ட தேர்வுத்துறை, இறுதி அவகாசம் அளித்துள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில், மார்ச் 2019 முதல் செப். 2020 வரையிலான பருவங்களில் இடைநிலை, மேல்நிலை, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டன. நேரில் சென்று மையங்களில் பெற்று கொள்ளாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய சான்றிதழ்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு பின், தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளாமல் இருந்தால், அழித்துவிடலாம்.எனவே, சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள், வரும் நவ. மாதத்திற்குள், ராமசாமி நகர், கவுண்டம்பாளையத்தில் உள்ள, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது, 45 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டிய சுய முகவரியுடன் தனித்தேர்வர் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பியோ பெற்று கொள்ளலாம். இந்த கால அவகாசத்திற்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள், திரும்ப பெற முடியாது.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us