தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாறு பாரதியார்களுடன் பாரதி விழா கோலாகலம்

நுாறு பாரதியார்களுடன் பாரதி விழா கோலாகலம்

நுாறு பாரதியார்களுடன் பாரதி விழா கோலாகலம்


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:
மகாகவி பாரதியார் நினைவு தினத்தையொட்டி, அவிநாசி அரசு கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில், பாரதி விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். தமிழ் துறை பேராசிரியர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். 100 மாணவ, மாணவியர் பாரதி போல் வேடம் அணிந்து கல்லுாரி வளாகத்தில் ஊர்வலமாக வீரநடை போட்டு வலம் வந்தனர். மைதானத்தில் பாரதி என்ற எழுத்து வடிவத்தில் நின்று காட்சியளித்தனர்.பாரதியார் கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற 300 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாரதியார் பாடல்களை மாணவர்கள் பாடினர். தமிழ் துறை பேராசிரியர் புனிதராணி, நந்தினி, ஜோதிபாண்டி, சரவணன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us