தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீண்டகால லீவு எடுப்பவர்களுக்கு மாத உதவித்தொகை நிறுத்த உத்தரவு

நீண்டகால லீவு எடுப்பவர்களுக்கு மாத உதவித்தொகை நிறுத்த உத்தரவு

நீண்டகால லீவு எடுப்பவர்களுக்கு மாத உதவித்தொகை நிறுத்த உத்தரவு


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழக அரசின் மாத உதவித்தொகை பெற்று வரும், கல்லுாரி மாணவிகள் நீண்ட கால விடுமுறையில் இருந்தால், உதவித்தொகையை நிறுத்த வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ்2 வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில், இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், 90 நாட்கள் கல்லுாரிக்கு வராத மாணவர்கள், நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு, உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து, ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லுாரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us