நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வில் 801 பேர் பங்கேற்பு
நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வில் 801 பேர் பங்கேற்பு
UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 09:15 AM
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நடந்த, நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வில், 801 பேர் பங்கேற்றனர்.மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக இளைஞர், இளம்பெண்கள் அதிகம் தேர்வாகும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் மதிப்பீட்டு தேர்வு வாயிலாக 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு தேர்வு, மாநிலம் முழுவதும் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு எம்.எஸ்.சாலை கலைமகள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன் சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையங்களில் நடந்தது. மொத்தம், 1,275 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 801 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 474 பேர் புறக்கணித்து விட்டனர்.
