சென்னை ஐ.ஐ.டி.,புதிதாக வழங்கும் இளங்கலை பட்டப்படிப்பு
சென்னை ஐ.ஐ.டி.,புதிதாக வழங்கும் இளங்கலை பட்டப்படிப்பு
UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 09:16 AM
இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு, இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை-ஐ.ஐ.டி) மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து, தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இந்திய தொழில்நுட்பக் கழகம் உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில், பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து, 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பர் 2023ம் ஆண்டு தொடங்கும் வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது.இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து படிப்பதற்கு சென்னை ஐ.ஐ.டி மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ) பங்கு பெறத்தேவையில்லை. அதற்கு பதிலாகபிளஸ் 2 அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்தமாணாக்கர்களுக்கு, இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இவ்வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும்.இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் பேச்சிலர் ஆப் சயின்ஸ் இன் டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி)யில் நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.இதற்கான தகுதிகள் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமா) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களாக இருக்க வேண்டும். தங்களது பிளஸ் 2 வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணாக்கர்கள், சென்னை ஐ.ஐ.டி நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.பி.எஸ் (டேட்டா சயின்ஸ் & அப்ளிகேஷன்) க்கான தேர்வு கட்டணம் ரூ.1,500- மற்றும் பி.எஸ்(எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்)க்கான தேர்வு கட்டணம் ரூ.3000/- ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.இப்படிப்பிற்கான செலவீனம், தாட்கோவால் வழங்கப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
