பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க புது அலுவலகம் திறப்பு
பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க புது அலுவலகம் திறப்பு
UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 06:37 PM
சென்னை:
தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க புதிய கட்டட திறப்பு விழா மற்றும் 18ம் ஆண்டு துவக்க விழா, சென்னை சூளையில் நேற்று நடந்தது.விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மா.கம்யூ., தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன், சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம், சங்க நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இன்னாள் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். சங்கத்திற்கான புதிய கட்டடத்தை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, மறைந்த புகைப்படக்கலைஞர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.விழாவில் உதயநிதி பேசியதாவது:
பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை தினமும் ஏதாவது ஒரு வகையில் சந்திக்கிறேன். இன்று அவர்களின் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. உங்களுடைய புகைப்படத்தில் சமூகநலனும் கலந்திருக்க வேண்டும். சங்கத்தினரின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இறுதியில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு உதயநிதி சார்பில் கேமரா பேக் வழங்கப்பட்டது.
