தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொபைல் செயலி வாயிலாக மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி

மொபைல் செயலி வாயிலாக மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி

மொபைல் செயலி வாயிலாக மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி


UPDATED : செப் 15, 2023 12:00 AM

ADDED : செப் 15, 2023 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2023 12:00 AM ADDED : செப் 15, 2023 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு செயலி வாயிலாக வாசிப்புத்திறன் பயிற்சி வழங்கப்பட்டது.அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், புதிய முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு ரீட் அலாங் என்ற மொபைல் செயலி வாயிலாக, வாசிப்பு பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இந்த செயலியில், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்புகள், வார்த்தைகளை வாசிப்பது, வாக்கியங்களை வாசிப்பது, கதைகளை கூறுவது என பகுதி வாரியாக வருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தினர். மேலும், மாணவர்களுக்கு அவர்களின் வாசித்தல் திறன் அடிப்படையில், தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுவதால், ஈடுபாட்டுடன் வாசிப்பு பயிற்சி மேற்கொள்கின்றனர்.பள்ளி ஆசிரியர் கண்ணபிரான், செயலியை பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us