தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் பூங்காவில் மாணவர்களுடன் மாநகராட்சி கமிஷனர் கலந்துரையாடல்

அறிவியல் பூங்காவில் மாணவர்களுடன் மாநகராட்சி கமிஷனர் கலந்துரையாடல்

அறிவியல் பூங்காவில் மாணவர்களுடன் மாநகராட்சி கமிஷனர் கலந்துரையாடல்


UPDATED : செப் 15, 2023 12:00 AM

ADDED : செப் 15, 2023 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2023 12:00 AM ADDED : செப் 15, 2023 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
டாடாபாத் அறிவியல் பூங்காவில் சுழலும் பெரிஸ்கோப், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி உள்ளிட்டவற்றை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.மாநகராட்சி 68வது வார்டு டாடாபாத் பகுதியில், 20 சென்ட் பரப்பளவில் அறிவியல் பூங்கா உள்ளது. இப்பூங்காவானது, ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் புனரமைக்கப்பட்டு கடந்த மே மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உலக உருண்டை, சுழலும் பெரிஸ்கோப், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி, உலக கடிகாரம், இருமுனை கூம்புகள், நியூட்டனின் வண்ணத்தட்டு, சூரிய மண்டலம், ஆற்றல் கடத்தும் வழிகள், கியர்களின் வகை, அலை இயக்கம் என, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையிலான இந்த அம்சங்களை, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பூங்காவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.நேற்று பார்வையிட வந்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியிருடன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கலந்துரையாடினார். அலை இயக்கம் உள்ளிட்டவற்றில் மறைந்திருக்கும் அறிவியல் குறித்து ஆசிரியர்கள் விளக்கமும் அளித்தனர்.மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த கமிஷனர் அறிவுறுத்தினார். மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us