UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 08:35 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள, 1.28 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள், பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தியை, நேற்று சந்தித்து பேசினர்.உங்களின் கோரிக்கை குறித்து, வரும், 21ம் தேதி, அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
