நிலவில் உருவான நீர் கூறுகள்: ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு
நிலவில் உருவான நீர் கூறுகள்: ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு
UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 05:01 PM
புதுடில்லி:
சந்திரயான் - 1 விண்கலத்தில் இருந்து பெறப்பட்ட தொலை உணர்வு தரவுகள் வாயிலாக, நிலவில் நீர் கூறுகள் எப்படி உருவானது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.நிலவில் நீர் கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய, சந்திரயான் - 1 விண்கலம் கடந்த 2008ல் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த விண்கலம், தொலைவில் இருந்தபடியே நிலவை ஆய்வு செய்து, தரவுகளை பூமிக்கு அனுப்பியது.இந்த தரவுகளை, அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த முடிவுகளை, நேச்சர் அஸ்ட்ரானமி என்ற அறிவியல் இதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். அதில், பூமியின் மேற்பரப்பில் உள்ள அதிக ஆற்றல் உடைய எலக்ட்ரான் உதவியுடன், நிலவில் நீர் கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.நிலவில் உள்ள நீரின் செறிவு, வினியோகம் அதன் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்வதும், நிலவில் மனிதர்கள் எதிர்காலத்தில் ஆய்வு மேற்கொள்ள நீர் ஆதாரங்களை வழங்குவதும் முக்கியமான பணி என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்னர்.
