UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 05:02 PM
அ நிறம் | அளவு
கோவை:
ஆசிய அளவிலான செஸ் போட்டியில், கோவை கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி ஜியோத்சனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.இந்திய செஸ் சங்கம் சார்பில் டாடா ஸ்டீல் ஏசியன் ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஜம்ஷத்பூரில் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒன்பது சுற்றுகளில் போட்டியிட்டனர். கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் இரண்டாமாண்டு மாணவி ஜியோத்சனா, 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.முதலிடத்தை 7.5 புள்ளிகளுடன் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த நாசர்கே நுர்காளி பிடித்தார். கோவை மாணவியை, கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.
