UPDATED : செப் 17, 2023 12:00 AM
ADDED : செப் 17, 2023 05:11 PM
திருப்பூர்:
மகளிர் திட்ட அலுவலகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உள்ளதால், விண்ணப்பித்து பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகளுக்காக, தற்காலிகமாக, பகுப்பாளர் பணியாளர் நியமனம் நடக்க உள்ளது. மூன்று ஆண்டு பணி அனுபவம் உள்ள, கம்ப்யூட்டர் பட்டயக்கல்வி பயின்ற, 30 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்கலாம்; மாதம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.தகுதியானவர், வரும், 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; 22ம் தேதி எழுத்து தேர்வும், 27ம் தேதி நேர்முகத்தேர்வும் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மகளிர் திட்ட அலுவலகத்தை, 0421 2971149 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
