பள்ளிகளில் கலையரங்க பயிற்சி தகுதியானவர்களுக்கு வாய்ப்பு
பள்ளிகளில் கலையரங்க பயிற்சி தகுதியானவர்களுக்கு வாய்ப்பு
UPDATED : செப் 17, 2023 12:00 AM
ADDED : செப் 17, 2023 05:13 PM
கோவை:
அரசுப்பள்ளிகளில் உள்ள கலையரங்கத்தில் பயிற்சி வழங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இசை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட கலைப்பயிற்சிகள் வழங்க, கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த பள்ளிகளில் உள்ள நிரந்தர, பகுதிநேர ஆசிரியர்கள், வாரந்தோறும் இரு பாடவேளைகளில், தனித்திறன் போட்டிகளில் மாணவர்களை தயார்ப்படுத்த உத்தரவிடப்பட்டது. கலையாசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு, தற்காலிகமாக கலைஞர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தகுதியான கலைஞர்கள், www.tnschools.gov.in என்ற இணையதளத்தில், பள்ளிகளில் பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பள்ளிகளில் பயிற்சி வழங்க அனுமதிக்கப்படும்.கோவை மாவட்டத்தில், கலையாசிரியர் இல்லாத, அதிக மாணவர்கள் படிப்பதால் கூடுதல் பயிற்சியாளர்கள் தேவைப்படும் பள்ளிகளின் பட்டியல் திரட்டப்படுகிறது. மாதம் மூன்று நாட்கள், கலைப்பயிற்சி வழங்க வேண்டும். ஒருவர் அதிகபட்சம் ஐந்து பள்ளிகளில் பயிற்சி வழங்க அனுமதிக்கலாம். இவர்களுக்கு ஒரு பயிற்சிக்கு, 300 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 4,500 ரூபாய் வரை, மதிப்பூதியமாக பெறலாம். ஆர்வம், ஈடுபாடுள்ளவர்கள், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.
