UPDATED : ஜன 19, 2010 12:00 AM
ADDED : ஜன 19, 2010 06:09 PM
கோவை: ராணுவத்தில் பணிபுரிய வீரர்கள் தேர்வு, நீலகிரி, வெலிங்டன் ராணுவ மையம் ‘தி மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில்’ பிப்., 2ம் தேதி நடக்கிறது.
இது குறித்து, வெலிங்டன் ‘மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்’ அறிக்கை:
பிப்., 2ம் தேதி காலை 7.00 மணிக்கு ‘இன்பான்ட்ரி சோல்ஜர் ஜெனரல்’ மற்றும் ‘ சோல்ஜர் டிரேட்ஸ்மென்’ என இரு பிரிவுகளில் ராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு நடக்கிறது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், ராணுவ வீரர்களின் சகோதரர்கள், போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
ஏ- பிரிவில், ‘இன்பான்ட்ரி சோல்ஜர் ஜெனரல்’ பணி , தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா, ஆந்திரா மற்றும் கோவா மாநிலத்தில் காலியாக உள்ளன. இதற்கு, கல்வித்தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் பாடத்திட்டத்தில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் மற்றும் மொத்தம் 32 சதவீத மதிப்பெண் ஒவ்வொரு பாடத்திலும் பெற்றிருத்தல் வேண்டும். மேற்படிப்பு முடித்தவர்கள் மொத்த மதிப்பெண்களில் 45 சதவீதம் கட்டாயமில்லை. வயது 17.5 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பி- பிரிவில், ‘ சோல்ஜர் டிரேட்ஸ்மென்’ பணி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ளன. இதற்கு, கல்வித்தகுதியாக, குறைந்தது எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும், எழுத்து தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வயது 17.5 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இத்தேர்வுகளில் பங்கேற்க, கல்வி ஒரிஜினல் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல், தாசில்தாரிடம் கையெப்பம் கொண்ட ஒரிஜினல் இருப்பிட மற்றும் பிறப்பு சான்றிதழ், போலீஸ்/ வருவாய் அதிகாரிகள்/ கிராம நிர்வாக அதிகாரி/ யாராவது ஒருவரிடம் நன்நடத்தைக்கான சான்றிதழ் (ஸ்டாம்ப் மற்றும் கையெழுத்து கொண்டிருத்தல் அவசியம்) கொண்டு வரவேண்டும்.
மேலும், 21 வயதிற்கு கீழ் < திருமணமாகாதவர்கள், அதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசாக இருப்பின் அவரிடமிருந்து இதற்கு முன் தன் மகன் யாரும் இத்தகைய தேர்வில் போட்டியிடிவில்லை என்ற கையெழுத்துடன் கூடிய படிவம், விளையாட்டு/என்.சி.சி., சான்றிதழ்கள் இருப்பின் அவற்றை கொண்டிருத்தல் வேண்டும். இது குறித்து விவரங்களை, 0423- 2282602 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
