திருப்பூரின் முதல் சி.இ.ஓ., வுக்கு வகுப்பறையில் அலுவலகம்
திருப்பூரின் முதல் சி.இ.ஓ., வுக்கு வகுப்பறையில் அலுவலகம்
UPDATED : ஜன 20, 2010 12:00 AM
ADDED : ஜன 20, 2010 05:58 PM
திருப்பூர் மாவட்டத்தின் முதல், முதன்மை கல்வி அலுவலராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். புதிய அலுவலகம் இன்னும் ஒதுக்கப்படாததால் இங்குள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் தற்காலிக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கோவை வருவாய் மாவட்டத்துடன் இணைந்திருந்த திருப்பூர் மாவட்டம், கடந்த ஆண்டு பிப்., 22ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அனைத்து முக்கிய துறைகளுக்கும் தேவையான அலுவலர்கள் நியமிக்கப்பட்டும், கல்வித் துறைக்கான அலுவலர்கள் நியமிக்கப்படாமலே இருந்தனர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக(சி.இ.ஓ) பதவி வகித்து வந்த ராஜேந்திரன், திருப்பூர் மாவட்டத்தின் முதல், முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே கோவை, நீலகிரி மாவட்டங்களின் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவிகளை வகித்தவர்.
புதிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் 13 அலுவலர்களுடன் தற்போது கே.எஸ்.சி., பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில்தான் செயல்பட்டு வருகிறது. பிரத்யேக அலுவலகம் இன்னும் கட்டப்படவில்லை. இது பற்றி சி.இ.ஓ., ராஜேந்திரனிடம் இது பற்றி கேட்டதற்கு, “தனி அலுவலகம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் புதிய அலுவலகம் ஒதுக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
