முதுகலை ஆசிரியர் பதிவு மூப்பு ஜன. 22 வரை சரிபார்ப்பு
முதுகலை ஆசிரியர் பதிவு மூப்பு ஜன. 22 வரை சரிபார்ப்பு
UPDATED : ஜன 21, 2010 12:00 AM
ADDED : ஜன 21, 2010 12:35 PM
சென்னை: முதுகலை ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், அது குறித்து ஜன. 22ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் 904 முதுகலை ஆசிரியர்கள், மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட உள்ளனர். அதன்பின், இட ஒதுக்கீடு அடிப்படையில், பதிவு மூப்பில் முதலிடத்தில் உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். பாட வாரியாக, ‘கட்-ஆப்’ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பதிவு மூப்பு தகுதி இருந்தும், பட்டியலில் பெயர் விடுபட்டிருந் தால், அது குறித்து 22ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
