தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமூக மருத்துவயியல் குறித்த பட்ட மேற்படிப்பு அறிமுகம்

சமூக மருத்துவயியல் குறித்த பட்ட மேற்படிப்பு அறிமுகம்

சமூக மருத்துவயியல் குறித்த பட்ட மேற்படிப்பு அறிமுகம்


UPDATED : ஜன 21, 2010 12:00 AM

ADDED : ஜன 21, 2010 12:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2010 12:00 AM ADDED : ஜன 21, 2010 12:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் பெர்கிலி-கலிபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து, இரண்டாண்டு சமூக மருத்துவயியல் பட்ட மேற்படிப்பு ஒன்றை துவங்க உள்ளன.


ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை இயக்குனர் தியாகராஜனும், பெர்கிலி பல்கலைக் கழக சமூக மருத்துவ பள்ளியின் தலைவர் ஸ்டீபன் எம் ஷார்டெல்லும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் ரங்கசாமி வரவேற்றார்.


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தோடு இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாறிவரும் தட்பவெட்ப சூழ்நிலைகளால் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டும். வேலூர் மாவட்டத்தில், தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் குரோமியம் உள்ளிட்ட நச்சு கலந்த ரசாயன பொருட்களால் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.


ராமச்சந்திரா பல்கலைக் கழகம் புதிதாக துவங்கியுள்ள பட்ட மேற்படிப்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆண்டிற்கு இரண்டு பேர் வீதம் சேர்ந்து பயில்வார்கள்,’ என்றார்.


பெர்கிலி பல்கலைக்கழக சமூக மருத்துவயியல் பள்ளித் தலைவர் ஸ்டீபன் எம் ஷார்டெல் பேசுகையில், ‘இந்த நூற்றாண்டில், சமூக மருத்துவ துறையில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள், தொற்றுநோய்கள், தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நோய்கள், மருத்துவ சேவைகள் மக்களுக்கு கிடைப்பது, மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் ஆகியவையே இந்த சமூக மருத்துவயியல் மேற்படிப்பின் நோக்கம்,’ என்றார்.


ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின் தொழிற்சார் மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவ துறையின் பேராசிரியர் கல்பனா பாலகிருஷ்ணன் பேசுகையில்,
‘சமூக மருத்துவயியல் தொடர்பான பட்ட மேற்படிப்பு 2010-11ம் கல்வியாண்டில் துவங்கும். எம்.பி.பி.எஸ்., பொறியியல், எம்.எஸ்சி., படித்தவர்கள் இந்த பட்ட மேற்படிப்பில் சேரலாம். சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்ட நிறுவனங்களுக்கு இந்த மேற்படிப்பு அவசியம் தேவைப்படும்’ என்றார்.


சிறப்பு விருந்தினர்களை கவுரவித்த ராமச்சந்திரா பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாச்சலம், பெர்கிலி பல்கலை உலக சுற்றுச் சூழல் மருத்துவத்துறை பேராசிரியர் கிரிக் ஸ்மித்தை, ராமச்சந்திரா வருகை தரும் பேராசிரியராக நியமித்தார். நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய் மற்றும் நோய் பரவுவியல் துறைத் தலைவர் லலித் காந்த், ராமச்சந்திரா பல்கலைக் கழக இணைவேந்தர் பார்த்தசாரதி, டீன் சோமசுந்தரம், தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us