தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேல்டெக் பல்கலைக்கு விடுமுறை

வேல்டெக் பல்கலைக்கு விடுமுறை

வேல்டெக் பல்கலைக்கு விடுமுறை


UPDATED : ஜன 22, 2010 12:00 AM

ADDED : ஜன 22, 2010 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2010 12:00 AM ADDED : ஜன 22, 2010 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நிகர்நிலை பல்கலை அங்கீகாரம் ரத்து செய்யப்படும் கல்லூரிகளின் மாணவர்கள் கடந்த இருதினங்களாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி வேல்டெக் பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டது.


சென்னை, ஆவடி அடுத்த வெள்ளானூரில் உள்ள வேல்டெக் பல்கலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 850 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த பெயர் பலகை, மாணவர் விடுதியின் மின் விளக்குகள் மற்றும் கல்லூரிக்கு வெளியே சாலையில் இருந்த விளக்குகள் ஆகியவை மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.


இது குறித்து கல்லூரி நிர்வாகம், ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தது. ஆவடி உதவிக் கமிஷனர் அழகர்ராஜா, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் கல்லூரிக்கு, வரும் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதியில் உள்ள மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us