முதுநிலை பாடப்பிரிவுக்கு இறுதி கவுன்சிலிங்: அக்., 9,10 ல் நடக்கிறது
முதுநிலை பாடப்பிரிவுக்கு இறுதி கவுன்சிலிங்: அக்., 9,10 ல் நடக்கிறது
UPDATED : அக் 07, 2023 12:00 AM
ADDED : அக் 07, 2023 05:16 PM
சிவகங்கை:
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் முதுநிலை பாடப் பிரிவு சேர்க்கைக்கு அக்.,9, 10 ல் கவுன்சிலிங் நடக்கும் என முதல்வர் கலையரசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இக்கல்லுாரியில் வரும் கல்வி ஆண்டிற்கு முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு சேர்க்கைக்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடைபெறும். எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர காலியாக உள்ள இடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு அக்., 9 அன்றும், விண்ணப்பிக்காமல் நேரடியாக வருவோருக்கு அக்.,10 அன்று காலை 9:00 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும்.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஒரிஜினல் கல்வி சான்று, 2 நகலுடன் வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ., மற்றும் எம்.காம்., பிரிவுக்கு ரூ.1000, எம்.எஸ்சி.,க்கு ரூ.1020, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு ரூ.1,520 கட்டணம் செலுத்த வேண்டும். அழகப்பா பல்கலை தவிர்த்து பிற பல்கலை இணைவு கல்லுாரியில் படித்த மாணவர்கள் கூடுதலாக ரூ.195 கட்டணம் செலுத்த வேண்டும், என்றார்.
